தெறி தயாரிப்பாளர் தாணு கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

10:48 PM |
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் தாணு. இவர் தயாரிப்பில் அண்மையில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு மீது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் 2 லட்சம் கடனை திருப்பி தரக்கோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தாணு பணத்தை திருப்பி தராததால் சென்னை நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வரும் 28ம் தேதிக்குள் தாணுவை கைது செய்ய போலீசுக்கு நீதிபதி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

தனுஷை சம்மதிக்க வைத்த சௌந்தர்யா..!!

10:09 PM |
தனுஷ் தற்போது பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ஒரு படத்தை இயக்கவுள்ளார், முதலில் இந்த படத்தில் புதுமுக ஹீரோக்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார்.

ஆனால், படத்தில் ஹீரோவிற்கு நடிப்பதற்கு நிறைய இடம் இருப்பதால் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்க, தனுஷும் கதை கேட்டுள்ளார்.

அவருக்கும் இந்த கதை மிகவும் பிடிக்க, உடனே ஓகே சொல்லி விட்டதாக ஒரு தகவல் உலா வருகின்றது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தை வாங்காத தியேட்டர்களுக்கு தாணு கொடுத்த அதிர்ச்சி..!!

11:37 PM |
தெறி படம் இன்று வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது. ஆனால், இந்த படத்தை செங்கற்பட்டு பகுதிகளில் ஒரு சில திரையரங்கில் எடுக்கவில்லை.

தற்போது படத்தின் பாசிட்டிவ் ரிசல்ட் அறிந்து ஒரு சில திரையரங்குகள் வெளியிட முன் வந்துள்ளனர்.

கடைசி வரை தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு இனி எந்த முன்னணி நடிகர்களின் படங்களும் கொடுப்பதாக இல்லை என தாணு கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய்‬ வசனத்தை கட் செய்த ‪தாணு‬..!!

9:39 PM |
நையப்புடை படத்தின் டிரைலர் தயாராகி வருகிறது. இந்த டிரைலரில் எஸ்.ஏ.சியின் வற்புறுத்தலின்பேரில் ஒரு சர்ச்சைக்குரிய வசனம் இணைக்கப்பட்டுள்ளதாம்.

 'ஒரு தமிழன் தான் நாட்டை ஆள போறான். அவன் வந்துகிட்டே இருக்கான். இனி அடுத்து தமிழன் ஆட்சிதான் என்ற வசனம் வருகிறதாம்.

''நையப்புடை'க்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. இந்த வசனத்தால் மேலிடத்தின் கோபப்பார்வைக்கு ஆளாகி தெறி, கபாலி படங்களின் ரிலீஸுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என பதறிய தாணு,

இந்த படத்தின் இயக்குனரை அழைத்து உடனே அந்த வசனத்தை கட் செய்ய சொன்னாராம்.

விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்ட வசனத்தை தாணு கட் செய்ய சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் வாசிக்க…

கணிதனை பாராட்டிய விஜய்..!!

11:19 PM |
அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் அட்லி, ” கணிதன் படம் விஜய் சாருக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் கடந்த வாரம் இப்படத்தை பார்த்த தாணு சார், சந்தோஷ் ‘கலக்கிட்டான்’ என மகிழ்ச்சியாக பேசினார். தாணு சாரிடம் இருந்து இந்த வார்த்தையை வாங்குவது ரொம்ப கஷ்டம்” என கூறினார்.

தணல் பறக்கும் "அதர்வாவின்" ‪கணிதன்‬ பட டிரைலர்..!!

இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், துப்பாக்கி படத்தின் போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com