வரும் நவம்பர் 7 ம் தேதி வந்தால் கமலுக்கு 62 வயது. காலம் சென்ற ஸ்ரீவித்யாவுடன் மிக நெருக்கமாக இருந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக கமல்ஹாசன் மூன்று பெண்களுடன் வாழ்ந்துள்ளார்.
1978-ல் கமல் வீட்டில் பார்த்து வைத்த பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்தார். 10 ஆண்டுகள் வரை ஒழுங்காய் ஓடிய வண்டி, நடிகை சரிகாவின் என்ட்ரிக்கு பின் விவாகரத்து ஆனது. விவாகரத்தின் போது,என் கையில் பத்து பைசா இல்லை.புதுசா வாழணும்” என்றார் கமல். இது குறித்து இன்றைக்கு வரை திட்டி தீர்க்கிறார் வாணி.
1988 ஆம் ஆண்டு சரிகாவுடன் திருமணம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தான் திருமணம். அதுவும் எதற்கு? குடும்பத்துடன் செல்லும்போது ஆயிரம் கேள்விகள் ஹோட்டலில் ரூம் தர. பார்த்தார், இதுவரை இருந்த லிவிங் டு கெதரை முறித்து திருமணம். சரியாய் …17 ஆண்டுகள். 2002 ல்முறிவுக்கு வந்தது. காரணம் , அப்போது கிசுகிசுவில் இருந்த சிம்ரன் என்றது கோலிவுட்.
அதன் பின், கௌதமி. இருவருக்கும் லிவிங் டு கெதிராக இருக்க ஆசை. அப்படியே 13 ஆண்டுகள். இப்போது கவுதமி கமலுக்கு கபிறந்த நாள் பரிசாக பிரிவை அறிவித்துள்ளார்.
இதற்கு காரணமும், பெண்கள் தான் என்று சொல்லப்படுகிறது. தான் பெற்ற பெண்ணா? அல்லது தன்னுடன் கிசுகிசுக்கப்படும் பெண்ணா? என்று கமல் தான் விளக்கவேண்டும் என்கிறது சமூகம்.
என்றைக்கு சமூகத்தை ஒரு பொருட்டாக எடுத்துள்ளார் கமல்…
எதுவானாலும், ஒரு பெண்ணுடன் கமலால் தொடர்ந்து இருக்க முடியவில்லை…என்பது எந்த விதத்தில் எடுத்துக்கொள்ளுவது என்று சமூகம் குழம்பித்தான் நிற்கிறது.
Tags:
Cinema
,
கமல்
,
கௌதமி
,
சரிகா
,
சினிமா
,
வாணி கணபதி
,
ஸ்ரீவித்யா