ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் ரம்யா கிருஷ்ணன் சம்பவத்தால் எண்ணெய் ஊற்றப்பட்டு பத்திக் கொண்டதால் கவுதமி கமல் ஹாஸனை பிரிந்ததாக கூறப்படுகிறது.
உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் முறைப்படி 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி கடந்த வாரம் அறிவித்தார்.
அறிவிப்பு வெளியிட்ட அவர் கமலை பிரிவதற்கான காரணத்தை குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.
ரம்யா கிருஷ்ணன்
கமல் ஹாஸன், ஸ்ருதி ஹாஸன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் ரம்யா கிருஷ்ணனும் உள்ளார். படத்தின் ஆடை வடிவமைப்பாளர் கவுதமி. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தபோது கவுதமிக்கும், ரம்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.
கவுன்
கவுதமி வடிவமைத்துக் கொடுத்த கவுனை அணிய ரம்யா கிருஷ்ணன் மறுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான கவுதமி நேராக கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டாராம்.
கமல்
தன்னுடன் மோதிய ரம்யா கிருஷ்ணனும், கமல் ஹாஸனும் ரிசார்ட் ஒன்றில் தங்கியது குறித்து கவுதமிக்கு காத்து வாக்கில் தகவல் வந்ததாம். இதை கேட்ட கவுதமி கமல் மீது செம கடுப்பாகிவிட்டாராம். இந்த கடுப்பும் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஸ்ருதி
அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நடந்தபோது ஆடை தொடர்பாக கவுதமிக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
கமல்
,
கவுதமி
,
சபாஷ் நாயுடு
,
சினிமா
,
ரம்யா கிருஷ்ணன்
,
ஸ்ருதி