பணம் வாங்கினேன் : ஒரு வழியாக உண்மையை ஒப்புக்கொண்ட சிவா..!!

1:37 AM |
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் தெரிவித்துள்ளார்.

தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். புதுப்படத்திற்காக அவருக்கு முன்பணம் கொடுத்ததாக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவா முன்பணத்தை வாங்கிவிட்டு தங்களுக்கு படம் பண்ணாமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் சிவா மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஞானவேல்ராஜாவிடம் மட்டும் ஒப்பந்த நகல் உள்ளது. மற்ற இருவரும் பணம் கொடுத்துவிட்டு 2 ஆண்டுகளாக காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து பேசப்படும் என டி. சிவா தெரிவித்துள்ளார் என்றார்.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன் கண்ணீர்க்கு இந்த இருவர் தான் காரணம் வெளிவந்த உண்மை..!!

12:31 AM |
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் சக்சஸ் மீட்டில் திடிரென சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு எங்கள் வேலையை செய்யவிடுங்கள் என உணர்ச்சிவசப்பட்டார்.

இதற்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசிக்கையில், இப்படத்தை வாங்கி வெளியிட்ட திருப்பூர் சுப்பிரமணி இதுபற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, மான்கராத்தே எடுத்த 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதன், மற்றும் வேந்தர் பிலிம்ஸ் மதன், இருவரும் சிவகார்த்திகேயனிடம் புதுப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து இருப்பதாகச் சொல்கின்றனர். சிவகார்த்திகேயனோ இரண்டு மதன்களிடம் இருந்தும் 'நான் அட்வான்ஸ் பணம் வாங்கவில்லை' என்று மறுக்கிறார்.

'எஸ்கேப்' மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கிறார். அந்த மன உளைச்சலில் இருந்ததால் சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார் என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com