தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பிரபல திரைப்பட நடிகர் அஜித்குமார் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற செய்தி இணையத்தில் வைரலாக பரவியது.
ஆனால் இது குறித்து அஜித் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் ஆக்குவதற்காக பி.ஜே.பி சார்பில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வரின் உடல் குறித்து தமிழ்நாட்டை விட டெல்லியில் தான் அதிக பேச்சு அடிபடுகிறதாம்.
திமுக தலைவர் கருணாநிதி முன்பு போல் பரபரப்பாக அரசியலில் இல்லை எனவும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரங்கள் இன்னும் சரிவர தெரியவில்லை.
எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டிருக்கிறது.
பி.ஜே.பி. தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்காது எனவும், இதற்கு ரஜினியும் கூடவே இருந்தால் மிகவும் நன்றகாக இருக்கும் என பிஜேபியை சேர்ந்தவர்கள் சிலர் அமித்ஷாவிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அமித்ஷா பிரதமர் மோடியிடம் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும், ரஜினியை எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என பி.ஜே.பி தரப்பு முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:
Cinema
,
அஜித்குமார்
,
கருணாநிதி
,
சினிமா
,
முதல்வர்
,
ரஜினிகாந்