தென்றலாய் வந்து தென்னகத்தைக் கலக்கியவர் அமலாப்பால் ..இளைஞர்களின் கனவுக்கன்னியாக வந்து பலரின் தூக்கத்தையும் கலைத்தவர் ..திடீரென திருமண அறிவிப்பு...திரையுலகில் சலசலப்பு ...பிரமாண்ட திருமணம் ..எல்லாம் ஓய்ந்து போனது சிலகாலத்தில் ..இன்று விவாகரத்து வரை வந்து நிற்கிறது இந்த விவகாரம் .
இதுபற்றி விஜய் மற்றும் அமலாப்பால் இருவருக்கும் நெருங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத குடும்ப நண்பர் ஒருவர் மலையாளப் பத்திரிகை ஒன்றில் கூறியிருப்பதாவது:
பத்திரிகைகளில் வருவது போன்று அமலாவுக்கும் விஜய்க்கும் இடையே பெரிதாகக் கூறும் அளவுக்கு முதலில் பிரச்சினைகள் இருந்ததில்லை. திருமணத்துக்குப் பின்னர் அமலா சினிமாவில் நடிப்பதை விஜய் வீட்டினர் விரும்பவில்லை. அதனால் அமலாவும் விஜய்யும் கொமேர்சியல் படங்களுக்கு சிறிய இடைவேளை விடலாம் என தீர்மானித்திருந்தனர்.
ஆனால் திருமணத்துக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்று படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமலாவுக்கு ஏற்பட்டது. விஜய்யின் முழு சம்மதத்துடன்தான் அவர் அந்தப் படங்களில் நடித்தார். இந்த காலகட்டத்தில் விஜய்யின் குடும்பத்தினர் அமலாவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தனர்.
மருமகளுக்கு கிடைக்க வேண்டிய எந்த மரியாதையும் அவர்கள் கொடுக்கவில்லை. அமலாவை கடுமையாக மனவேதனைப்படுத்தி உள்ளனர். அமலாவின் தேவைகளுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப் படவில்லை. இது விஜய்க்கும் தெரியும். இந்தளவு நடந்தும் கூட இருவருக்குமான உறவில் எந்த விரிசலும் ஏற்பட்டவில்லை.
மனைவி என்ற நிலையிலும் நடிகை என்ற நிலையிலும் அமலாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அளித்து வந்தார் விஜய். அமலா நடிக்கும் படங்களில் செட்டுக்கு விஜய் வருவதும் உண்டு. கடைசியாக அவர் நடித்த படத்தின் டப்பிங்கிலும் விஜய் கலந்துகொண்டார்.
விஜய்யின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் இருவ ருக்கும் இடையே பிரச்னை அதிகரிக்க காரணம். விஜய்யின் குடும்பத்தினர் மனரீதியாக கொடுத்த கொடுமை அதிகரித் தால் வேறு வழியின்றி விவாகரத்து செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.
இதையடுத்து இருவரையும் சேர்த்துவைக்க நண்பர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். அது பலனில்லாமல் போனதால் விவாகரத்து செய்ய இருவரும் சேர்ந்தே முடிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.இது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Cinema
,
அதிரவைக்கும் பின்னணி
,
அமலாப்பால்
,
குடும்பத்தினர்
,
சலசலப்பு
,
சினிமா
,
விஜய்