கோலிவுட் திரையுலகில் அஜித்தும் விஜய்யும் இரு துருவங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவருமே பர்சனலாக நண்பர்களாக பழகி வந்தாலும் தொழில்முறை போட்டி என்பதை தவிர்க்க முடியாது. மேலும் இருதரப்பு ரசிகர்களும் இணையதளங்களில் மோதிக்கொள்வது என்பது கிட்டத்தட்ட தினமும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா அவர்கள் தனக்கு விஜய் படங்களை போன்றே அஜித்தின் படங்களும் ரொம்ப பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக வாலி, ஆசை, காதல்கொண்டேன் போன்ற படங்களில் அஜித்தின் பெர்ஃபாமென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:
Cinema
,
அஜித்
,
ஆசை
,
காதல்கொண்டேன்
,
சினிமா
,
வாலி
,
விஜய்
,
ஷோபா