‘‘சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டேன்’’ என்று நடிகை அசின் கூறினார்.
திருமணம்
தென்னிந்தியாவில் இருந்து இந்திக்கு சென்ற ஹேமமாலினி, ஸ்ரீதேவி, வித்யாபாலன் போன்றோர் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வரிசையில் அசினும் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்து இல்லற வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்.
தமிழில் அசின் 2004–ல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக இருந்தார். கஜினி, சிவகாசி, போக்கிரி, வரலாறு, வேல், தசாவதாரம், போன்றவை அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன. கடைசியாக 2011–ல் காவலன் படத்தில் நடித்தார். அதன்பிறகு இந்திக்கு சென்று அங்கும் கொடிகட்டி பறந்தார்.
சினிமாவை விட்டு விலகல்
அமீர்கான், சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்ஷய்குமார், என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். திருமணத்துக்கு பிறகு அசின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வருவதாகவும் எனவே விரைவில் நடிக்க வருவார் என்றும் இணையதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு அசின் பதில் அளித்து தனது சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராமில்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:–
‘‘என்னை பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகின்றன. நான் திருமணத்துக்கு முன்பே படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். நடிக்க வேண்டிய படங்களையும் முடித்து கொடுத்து விட்டேன். அதுபோல் விளம்பர படங்களுக்கான ஒப்பந்தங்களையும் முடித்து விட்டேன். தற்போதைய நிலையில் நான் படங்களில் மீண்டும் நடிக்க வில்லை.’’
இவ்வாறு அசின் கூறி உள்ளார்.
Tags:
Cinema
,
அசின்
,
எம்.குமரன்
,
கஜினி
,
சிவகாசி
,
சினிமா
,
போக்கிரி
,
வரலாறு