லட்சுமி ராமகிருஷ்ணன் சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்களால் மிகவும் அறியப்பட்டவர். இவர் ஜீ தொலைக்காட்சியில் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவை.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் TRPக்காக வேண்டுமென்றே சில விஷயங்கள் செய்யப்படுகின்றதா? என ஒரு பத்திரிக்கையில் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘முதல்ல ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்பறேன், ஜி தமிழ் ட்ரஸ்ட் இல்ல, சேனல். ரேட்டிங், போட்டிகள், மத்த சேனல்களோட ஆதிக்கம் இப்படி எல்லாமே இருக்கு..
எல்லாத்தும் மேல சக மனிதர்கள் அங்க வேலை செய்கிறார்கள், அவங்களுக்கும் சம்பளம், போனஸ், இதுக்கெல்லாம் விளம்பரம் வேணும், ஸ்பான்சர் வரணும், அதெல்லாம் பார்க்காம செய்ய வேண்டும் என்றால் முடியுமா சொல்லுங்க.. பிராக்டிகலா பார்க்க வேண்டும் அல்லவா!. சேவை என்றால் ஏன் மருத்துவமனைகளை இலவசமாக நடத்தலாமே’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
சொல்வதெல்லாம் உண்மை