அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் பின்னணி இசை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த வேலைகளை இரவு பகலாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இப்படம் சென்சார் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அனைத்து படங்களுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தெறி படத்துக்கும் யூ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
அட்லீ
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
ஜி.வி. பிரகாஷ்