தஞ்சை மாவட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன் (வயது 50). இவர் டிராக்டர் வாங்க ஒரு தனியார் நிதி வங்கியில் விவசாய கடன் பெற்று கடைசி 2 தவணைகள் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.
இதைதொடர்ந்து பாலனுக்கு சொந்தமான டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் பறிமுதல் செய்யும்போது விவசாயி பாலன் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் தற்போது இந்த பிரச்னை மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றுள்ளது. நடிகர் விஷாலும் அவருக்கு உதவி செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால் பிரபல நகைச்சுவை நடிகரும் உப்புக்கருவாடு, ஆடாம ஜெய்ச்சோமடா படங்களின் ஹீரோவுமான கருணாகரன், விவசாயி பாலனை தொடர்புகொண்டு அவருடைய வங்கிக்கணக்கில் ஒரு லட்சம் ரூபாயை செலுத்திவிட்டாராம்.
கடந்த ஆண்டு இவர் டிவிட்டரில், “ஒவ்வொரு படத்திற்கும் நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை போராடி வரும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்க இருக்கிறேன்” என கூறியிருந்தார். அதை தற்போது இவர் நிறைவேற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
ஆடாம ஜெய்ச்சோமடா
,
உப்புக்கருவாடு
,
கருணாகரன்
,
சினிமா
,
விஷால்