‘தங்கமே… உன்னைத்தான் தேடி வந்தேனே… ஓஓஓ…’’ – செல்போன் ரிங்டோன் ஒலித்ததும் போனை எடுத்தார் நடிகை.
‘‘ஹலோ..’’ ‘‘ஹாய் மேடம்… நான் ………. பேசுறேன்! நல்லாருக்கீங்களா? உங்க படம்லாம் மரண மாஸ் ஹிட் ஆகுது! வாழ்த்துகள்! ……. படத்துல பாவாடை சட்டைல வந்து அசத்திட்டீங்க?’’
‘‘தேங்க்யூ சார்!’’
‘‘நீங்க இல்லாம ஹாரர் படம் நிச்சயம் ஓடியிருக்காது! நீங்கதான் இப்போதைக்கு கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார்னு பத்திரிகையில எழுதுறாங்க! உங்க விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!’’
‘‘தேங்க்யூ சார்!’’
‘‘அனுராக் காஷ்யப் தயாரிச்ச ‘குயின்’ இந்திப் பட ரீமேக்ஸ் ரைட்ஸ் வாங்கி வெச்சிருக்கேன். தமிழ்ல உங்களை வெச்சு ரீமேக் பண்ணா, படம் நிச்சயம் மெகா ஹிட் ஆகும்! இது உங்க விருப்பப்படியே ஹீரோயின் சப்ஜெக்ட்டும்தான்… என்ன சொல்றீங்க!’’
சில விநாடிகள் யோசனை கலந்த மௌனம்.
‘‘ம்ம்ம்… நிச்சயம் சார்… பண்ணலாம். டைரக்டர், ஹீரோ யாரு?’’
‘‘டைரக்டர் நான்தான்; ஹீரோ என் பையன்!’’ சில விநாடிகள் அதிர்ச்சி கலந்த மௌனம்.
‘‘சாரி சார்… வேற யாராவது டாப் டைரக்டர்ஸ் பண்ணினாதான் இது எடுபடும். அதேமாதிரி ஹீரோ கேரக்டருக்கும் வேற யாரையாவது பாருங்க… கண்டிப்பா பார்க்கலாம்!’’
கோலிவுட் பிரியர்களும், நயன்தாரா வெறியர்களும் நிச்சயமா நயன்தாராவைக் கண்டுபிடித்திருப்பீர்கள்…
ஓகே! அந்த டைரக்டர்? – ‘மலையூர் மம்பட்டியான்’ தியாகராஜன்.
ஹீரோ – சின்ன மம்பட்டியான். இன்னொரு சாஹஸம் காட்ட அப்பாவும், பையனும் தயாராகிட்டாங்களோ?
Tags:
Cinema
,
Cinema. நடிகை
,
சாஹஸம்
,
சினிமா
,
தியாகராஜன்
,
மம்பட்டியான்
,
லேடி சூப்பர் ஸ்டார்