ஜீவா நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும், வில்லனாக சிபிராஜ் என்று கலக்கல் காம்போவில் சிக்ஸர் அடிக்க ரெடியாகிவரும் படம் தான் போக்கிரி ராஜா. இப்படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.
டி. இமான் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் “அத்துவுட்டா” பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்திர் கலந்துகொண்டார். புலி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது தான் சினிமா நிகழ்ச்சியில் தலைக் காட்டியிருக்கிறார் டி.ராஜேந்தர்.
அவர் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமில்லை போலும்.இவ்விழாவில் பேசிய டி.ஆர் “ விஜய்யின் புலி பட பாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவில் இருந்தேன். ஏனெறால் அவ்விழாவில் புலி என்ற சொல்லில் அடுக்கு மொழியில் பேசினேன். காரணம், புலி என்றால் பிடிக்கும், மேலும் ஈழத்தமிழர்களுடைய ஆதரவாளன் நான். இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்காக என் பதவியையே ராஜினாமா செய்தவன் நான்.
டி.ராஜேந்தர் இதற்கு முன்னாடி இப்படி அடுக்குவான் என்று தெரியாதா. நீ நக்கல் பண்ணினால், நானும் நக்கல் பண்ணுவேன். வாழ்க்கையில் யார் தான் நக்கல் பண்ணவில்லை. நான் அத்தனை புலியை அடுக்கினேன் என்றால் எல்லாமே என் மனதில் இருந்து வந்தது. ‘புலி’ என்று தலைப்பு வைத்ததிற்கு ஒரு தில் வேண்டும். அந்த தில்லை வைத்து தான் என்னிடம் இருந்து சொல் வந்தது.
என் பார்வையில் பார்த்தால் நான் பேசியது தப்பில்லை. ஆனாலும் அந்த விழாவிற்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளானேன். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். இந்த விழாவுக்கு பார்வையாளனாகவும், நண்பனாகவும் வருகிறேன் என்று சொன்னேன். இங்கு பேச்சாளராக வரவில்லை. ‘வாலு’ படம் பிரச்சினையின் போது வந்து நின்ற ஒரே ஒரு இதயம் பி.டி.செல்வக்குமார் தான். இந்த விழாவிற்கு வந்ததற்கும் அவரே காரணம்.
நான் இங்கு வந்து நிற்பதற்கு கடவுள் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மூன்றும் தான் காரணம். இந்த மூணு கையை வைத்து தான் என் வாழ்க்கை. இந்த மூணு கை இருந்ததால் தான் நான் வாழ்க்கையில் ஆகவில்லை மொக்கை. இப்படி பேசுவதால் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள் மைக்கை.
நான் அடுத்தவர்களை மாற்றுவதை விட, என்னை நான் மாற்றிக் கொண்டேன். எதுகை மோனை மட்டுமல்ல அடுக்கு மொழியிலும் பேசத் தெரியும். ஒரு காட்சியைச் சொல்லும்போது கூட நாயகியை தொடாமல் 35 வருடங்கள் வாழ்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் யாருமே விருது தர மாட்டார்கள். எனக்கு தேவையுமில்லை. இன்று வரைக்கும் நான் விருதுக்கு அலைந்ததே இல்லை. இந்த காலத்தில் விருதையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டியதிருக்கிறது” என்று பேசினார் டி.ராஜேந்தர்.
Tags:
Cinema
,
சினிமா
,
டி.ராஜேந்தர்
,
போக்கிரி ராஜா
,
விஜய்
,
ஜீவா
,
ஹன்சிகா