ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது கடைசிக்கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் மலேசியாவுக்கு சென்றுள்ளனர் படக்குழுவினர்.
மலேசியாவில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட்டார்கள். இதனால் ‘கபாலி’ படப்பிடிப்பில் இருந்து சோகத்துடன் வெளியேறியுள்ளார் தன்ஷிகா.
இப்படத்தில் நடித்ததற்காக ரஜினி, இயக்குனர் ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோருக்கு தன்ஷிகா நன்றி தெரிவித்துள்ளார். இப்படத்தில் கிஷோர், கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் அடுத்தகட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். உலகம் முழுவதும் இப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
கபாலி
,
சினிமா
,
தன்ஷிகா
,
ரஜினி நடிப்பில்