பேஸ்புக்கால் பைத்தியமான தமிழ் குடும்பப் பெண்! நடந்தது என்ன? அதிர்ச்சியில் கணவன்!! – வீடியோ

10:58 PM |
மேலும் வாசிக்க…

பேஸ்புக் தளத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான Buttons இனி பயன்படுத்தலாம்.!!

6:26 PM |
 பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பதிவை எமக்கு பிடித்திருந்தால் லைக் (Like) செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.


என்றாலும் வருத்தத்துக்குரிய ஒரு தகவல் பகிரப்படும் போது அல்லது ஆச்சரியமான பதிவுகள் பகிரப்ப்படும்போது அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் பகிரப்படும் போது அதனை "Like" செய்வதென்பது அவ்வளவு பொருத்தமான ஒரு செயற்பாடு அல்ல.


எனவே அதிகமானவர்களால் பேஸ்புக் தளத்தில் Dislike செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டது.

எனினும் Dislike என்பதற்கு பதிலாக மேற்குறிப்பிட்டது போன்ற எமது உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த  வருடம் அறிவித்திருந்தது.


மேலும் இந்த வசதியை அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கி சோதித்து வந்தது.



தற்பொழுது உலகில் இருக்கும் அனைத்து பயனர்களாலும் இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் தளத்தில் தோன்றும் பதிவுகளில் உள்ள லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான மேலதிக பட்டன்கள் தோன்றும் இனி அதில் பொறுத்தமான பட்டனை தெரிவு செய்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தலாம்.

லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்களுக்கு இந்த வசதி தோன்றவில்லை எனின் கவலை வேண்டாம் அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ உங்களுக்கு இந்த வசதி கிடைத்து விடும்.

ThQ - Tamilinfotech.com
மேலும் வாசிக்க…

பேஸ்புக் இலவச அடிப்படை சேவை ரத்து : கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்.!!

4:28 AM |
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனத்தின் இலவச அடிப்படை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த 8 ஆம் திகதி புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

அதன்படி, இணையதள சேவையைப் பொறுத்து, மாறுபட்ட கட்டணம் வசூலிப்பதற்கும், இலவச சேவைகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சேவை வழங்கும் நிறுவனம், பிற நிறுவனங்களுடன், நபர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, இணைய தள சம நிலை சேவையை பாதுகாக்கும் வகையில் எடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் தகவல்களுக்கு, எந்த இணையதளமாக இருந்தாலும், எந்த செயலியைப் பயன்படுத்தினாலும், சம கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ்சுடன் இணைந்து பேஸ்புக் உள்ளிட்ட சில அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்கி வந்த "ப்ரி பேசிக்ஸ்" திட்டம் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீரோ ரேட்டிங் பிளான் மாற்றம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிராய் விதித்துள்ள இந்த தடை ஏமாற்றம் அளிப்பதாக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் தனது இலவச அடிப்படை சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சலில், "இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலவச பேசிக்ஸ் திட்டம் இனி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com