‘மான் கராத்தே’, ‘ராஜா ராணி’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியவர் சத்யா. இவர் விஜய் நடிக்கவிருக்கும் 60-வது படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த வாய்ப்பு விஜய்யால் வந்தது என்று கூறுகிறார்கள்.
இது குறித்து சத்யா கூறும்போது, “தெறி படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். ஒரு முறை படப்பிடிப்பில் காஸ்ட்யூமை கொடுத்துவிட்டு, நான் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்று விட்டேன். அவருடைய உதவியாளர் வந்து ‘விஜய் உங்களை அழைக்கிறார்’ என்றார். நானும் என்னாச்சு என்று தெரியவில்லையே என்று பயத்தோடு சென்றேன்.
‘உங்களுடைய காஸ்ட்யூம் டிசைன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது அடுத்த படத்தில் நீங்கள் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறீர்களா? வேறு எதுவும் படம் ஒப்புக் கொண்டு இருக்கிறீர்களா?’ என்று கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினார் விஜய். ‘என்ன சார்.. இப்படி கேட்கிறீர்கள். கண்டிப்பா செய்கிறேன்’ என்றேன், ‘நான் இயக்குனரிடம் பேசுகிறேன். நீங்கள் போய் பாருங்கள்’ என்று விஜய் கூறினார். அவர் அளித்த வாய்ப்பு இது. படத்தில் காஸ்ட்யூம் டிசைன் நன்றாக இருக்கும் நீங்களே பாருங்கள்” என்றார்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் எடிட்டராக பிரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், காமெடி பாத்திரத்தில் சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
தெறி
,
மான் கராத்தே
,
ரஜினி முருகன்
,
விஜய்