சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணஉதவி செய்ததோடு நில்லாமல் அடுத்தகட்டத்துக்குப் போயிருக்கிறார் விக்ரம். தமிழ்த்திரையுலகில் உள்ள எராளமான நடிகர் நடிகையரை வைத்து ஒரு பாடலைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார்.
விக்ரமே இயக்கும் அந்தப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகச் சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. பிதாமகன் படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடித்திருந்தார் சூர்யா. அதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றுகூடச் சொல்லப்பட்டது.
சூர்யாவின் திருமணத்துக்கு வராத ஒரேநடிகர் என்று விக்ரமைச் சொல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்தப்பாடலுக்காக மீண்டும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். விக்ரம் அழைத்ததும் மனமுவந்து ஒப்புக்கொண்டு வந்து நடித்தாராம் சூர்யா. இதுவரை சூர்யா, விஜயசேதுபதி, பாபிசிம்ஹா, பிரபுதேவா, ஜெயம்ரவி, ஜீவா, பரத், அமலாபால், வரலட்சுமிசரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களோடு விஜய், அஜீத் ஆகிய இருவரையும் இந்தப்பாடலில் தோன்றவேண்டும் என்று விக்ரம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். விஜய், தெறிபடத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அஜித், அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார். இருவரும் விக்ரமின் அழைப்பை ஏற்பார்களா? என்று தெரியாமல் விக்ரம் உட்பட அந்தக்குழுவினர் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித் வருவார்களா
,
சினிமா
,
சூர்யா
,
சூர்யா ஓகே. விஜய்
,
விஜய்