தமிழில் அறிமுகமாகிற எல்லா நடிகைகளுக்கும் இங்குள்ள மாஸ் ஹீரோக்களுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசையிருக்கும். சொல்லி வைத்தார் போல, நீங்க யாரோட நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க என்று ஒரு அரத பழசான கேள்வியை கேட்டு உசுப்பிவிடுவார்கள் நம்ம நிருபர்கள். அது போதாதா? அப்போது மார்க்கெட்டில் யார் டாப்போ? அவர்களின் பெயரை எடுத்து விடுவார்கள் அந்த எல்கேஜி பிள்ளைகள்.
சரி, மேட்டருக்கு வருவோம். ரஜினி, கமல், விஜய், அஜித் இந்த நால்வரில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இன்றைக்கும் த்ரிஷா காத்துக் கொண்டிருக்கிறார். நான் கமல் சார் உட்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டேன். இன்னும் ரஜினி சாருடன் மட்டும் தான் நடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருப்பேன் என்று மீடியாக்களிடம் வெளிப்படையாகவே பேசும் த்ரிஷா முடிஞ்சா நீங்களே அவர்கிட்ட சொல்லிவிடுங்களேன் என்று நிருபர்களையும் உசுப்பிவிடுகிறார் பல காலமாக.
இன்னொரு முன்னணி நடிகையான ஹன்சிகாவுக்கும் இதே ஆசை தான். இப்படி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டால் அந்தப் படத்திலிருந்து அவர்களது சம்பளம் ஏறும், பட வாய்ப்புகளும் குவியும் என்பதுதான் கணக்கு. இவர்களைப் போலவே இங்கிலாந்து இறக்குமதியான எமி ஜாக்சனுக்கு அஜித்துடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என்று ஆசையாம். என்னதான் அஜித்துடன் ஜோடி சேர ஆசை என்றாலும் அவருக்கு பிடித்த நடிகர் என்று கேட்டால் தனுஷைத்தான் கை காட்டுகிறார்.
அஜித் வீட்டுப் பக்கம் யாராவது போனீங்கன்னா இந்த மெசேஜை பாஸ் பண்ணிட்டுப் போங்கப்பா…
Tags:
Cinema
,
அஜித்
,
அஜீத்திடம் இந்த மெசேஜை பாஸ் பண்ணுங்க
,
கமல்
,
சினிமா
,
ரஜினி
,
விஜய்