நகைச்சுவை நடிகர் சந்தானத்துக்கு நாளை பிறந்தநாள். அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல், இந்த வருடமும் அவரது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, சந்தானம் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் அவரைப் பற்றி ஒரு பாடலை உருவாக்கி வெளியிடவுள்ளனர். இதற்குSANTA ANTHEM என்று பெயரிட்டுள்ளனர்.
சமீபத்தில் சந்தானத்தை சந்தித்த அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்தானத்துக்கு மாலை அணிவித்து, இந்த பாடலை வெளியிட்டும் உள்ளனர். இன்று நள்ளிரவு இந்த பாடலை இணையதளத்தில் வெளியிடவுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படமான சர்வர் சுந்தரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நாளை வெளியிடவிருக்கின்றனர். இப்படத்தை ஆனந்த் பால்கி என்பவர் இயக்குகிறார்.
சந்தானம் தற்போது ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திகில் கலந்த படமாக உருவாகி வருகிறது.
Tags:
Cinema
,
SANTA ANTHEM
,
சந்தானம்
,
சினிமா
,
தில்லுக்கு துட்டு