மலையாளத்தில் வெற்றி பெற்ற பெங்களூர்டேஸ் படத்தின் தமிழாக்கமான பெங்களூர்நாட்கள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி மற்றும் இயக்குநர் பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நடிகர் ராணாவிடம், த்ரிஷா பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்று கேட்டதற்கு, இந்தப்படத்தில் சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகிய மூன்றுபேர் நடித்திருக்கிறார்கள் அவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்ன ராணா அதோடு நில்லாமல், த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று சொன்னார்.
அதற்கு, ஏற்கெனவே ஆர்யா, நீங்கள் இந்தப்படத்தில் உங்கள் கதைபோலவே வாழ்ந்திருக்கிறீர்கள் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறாரே என்றதும் ஆர்யா எப்போதுமே மறைமுகமான ஆள்தான் என்று கலகலக்க வைத்தார் ராணா. உடனே பத்திரிகையாளர்கள் ஆர்யாவிடம், த்ரிஷா பற்றிக் கேட்டதற்கு, த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ராணாவுக்கு என்ன மாதிரி என்று அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னதும்  அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.
Tags:
ARYA
,
Cinema
,
சினிமா
,
த்ரிஷா
,
த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் என்ன உறவு