விஜய் நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் வெளியாகும் முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. கடைசியாக பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு வழியாக படம் வெளியானது. வெளிவந்த பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார்.
விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். இது இவருக்கு 150வது படமாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை தேர்வு செய்து, இதில் நடிக்க சிரஞ்சீவி சம்மதித்திருக்கிறார்.
தற்போது தெலுங்கிலும் இப்படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது. நரசிம்ம ராவ் என்பவர் இப்படத்தின் கதை என்னுடையது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், படம் தொடங்குவதற்கு முன்னதாகவே சிக்கல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
Tags:
Cinema
,
Samantha
,
Vijay
,
கத்தி
,
சமந்தா
,
சினிமா
,
விஜய்