தமிழ் சினிமாவில் இன்று முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைபுலி S. தாணு காரணம் அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் அதை விட முக்கியம் ஒரே சமயத்தில் இரண்டு ஜம்பாவான்களை வைத்து படம் எடுத்து கொண்டு இருப்பவர். ஒன்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து இளைய தளபதி விஜய் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கபட்டது இதில் தெறி படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டது.
இளைய தளபதி விஜய் ரசிகர்களின் பலம் தமிழகத்தை தாண்டி தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என அதிகமாகி கொண்டே இருக்கின்றது. மேலும், வெளிநாடுகளிலும் விஜய் படங்களுக்கான வியாபாரம் அதிகம்.இந்நிலையில் சமீபத்தில் கபாலி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, கபாலி ரூ 8.5 கோடிக்கு அமெரிக்காவில் வியாபாரம் ஆகியிருப்பதாக கூறினார்.அது மட்டுமின்றி வேறு எந்த நடிகரின் படங்களும் ரூ 2.5 கோடி கூட தாண்டியது இல்லை என குறிப்பிட்டு இருந்தார். இவர் தான் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் தயாரிப்பாளரும் கூட, இப்படி இவர் பேசியது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Cinema
,
Theri
,
Vijay fans
,
சினிமா
,
தெறி
,
ரஜினிகாந்த்
,
விஜய்