ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பவர் இன்னொரு ஹீரோவின் தீவிர ரசிகராக நடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் தமிழ்நாட்டில் மாஸ் ஹீரோவாக உள்ள ஒருவரின் தீவிர ரசிகராக மலையாள ஹீரோ நடிப்பது புதுசு.
இம்மாதம் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படம் “பாவாட ” ப்ரித்திவிராஜ், அனூப் மேனன் , மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை மார்த்தாண்டன் என்பவர் இயக்கி உள்ளார்.புத்தாண்டு சிறப்பாக இப்படத்தின் ட்ரைலர் வெளியானது, இப்படத்தில் ப்ரித்திவிராஜ் தீவிர விஜய் ரசிகராக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரைலரில் விஜய் நடித்து வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தின் முதல் நாள் காட்சியில், ப்ரித்திவிராஜ் அடித்து பிடித்து டிக்கெட் வாங்குவது போன்றும், நடிகர் விஜய்யின் பெரிய கட்-அவுட்டுக்கு மாலை அணிவிப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.
கேரளாவில் நடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதால், அங்கு உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே ஒரு படத்தில் மம்மூட்டி ரசிகனாக நடித்திருந்தார். ப்ரித்திவிராஜ் தமிழில் ராவணன், மொழி, காவியத்தலைவன், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஆஷா சரத் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்தக் கேரக்டருக்கு முதலில் தேர்வானவர் ஷோபனா என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெய சூர்யா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தீவிர விஜய் ரசிகராக ப்ரிதிவிராஜ்
,
ப்ரித்திவிராஜ்
,
விஜய்