அஜித், விஜய் இருவரும் அவர்களது வளர்ச்சிப் பாதையில் 15 வருடங்களுக்கு முன்பு நுழைந்த போது அவர்களிருவருக்குமே மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. இவரது இயக்கத்தில் 1999ல் வெளிவந்த வாலி திரைப்படம் அஜித்துக்கும், 2000-ல் வெளிவந்த குஷி படம் விஜய்க்கும் ஒரு ஸ்டார் வேல்யூ உருவாகக் காரணமாக அமைந்தது. அதன்பின் அவர்களிருவருமே தங்களுக்குத் திருப்புமுனை கொடுத்த எஸ். ஜே.சூர்யாவின் இயக்கத்தில் இதுவரை நடிக்கவில்லை.
சில வருடங்கள் கழித்து படத்தை அஜித்தை வைத்து இயக்க சூர்யா முடிவு செய்து விளம்பரம் கூடச் செய்தார்கள். ஆனால், அந்தப் படம் ஆரம்பத்திலேயே நின்று போனது.குஷி படத்தின் மாபெரும் வெற்றியால் அந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்க சூர்யா இயக்கினார். அந்தப் படம் பவன் கல்யாணுக்கும் தெலுங்கில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்கினார் சூர்யா.
குஷி மூலம் தனக்கு திருப்புமுனையைக் கொடுத்ததை மறக்காத பவன் கல்யாண் மீண்டும் சூர்யாவுக்கு நடிக்கக் கால்ஷீட் கொடுத்தார். மீண்டும் சூர்யா - பவன் கூட்டணியில் உருவான புலி படம் 5 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பவனுடன் இன்னும் நல்ல நட்புடன் இருக்கும் சூர்யா, பவன் கல்யாணிடம் குஷி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால் அவரும் நடிக்கச் சம்மதித்துவிட்டார் என்கிறார்கள்.
இதே கதையைத்தான் சில மாதங்களக்கு முன் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் சூர்யா. அவர் அதில் நடிக்க விருப்பம் தெரிவிக்காமல் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார். விஜய் வேண்டாமென்றதால் தற்போது பவன் கல்யாணை வைத்து படத்தை இயக்க சூர்யா தயாராகி வருகிறார். இருந்தாலும் இப்படத்தின் முறையான அறிவிப்பு வெளியாக கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.
Tags:
Cinema
,
Vijay
,
சினிமா
,
விஜய் கைவிட்டதால் பவன் பக்கம் தாவும் எஸ்.ஜே.சூர்யா