ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘எஸ் 3’. இப்படம் ‘சிங்கம் 1’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது. இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக வருகிறார். சர்வதேச குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சூர்யாவுடன், ஸ்ருதிஹாசன், சூரி, பாடகர் கிரிஷ், ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆனால், முதல் இரண்டு பாகங்களிலும் சூர்யாவுடன் நடித்த விவேக், இரண்டாம் பாகத்தில் நடித்த சந்தானம் ஆகியோர் இப்டத்தில் இடம் பெறவில்லை.
முதல் இரண்டு பாகங்களில் சூர்யாவுடன் இணைந்து விவேக் போலீசாக நடித்திருந்தார். அதனால் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்னும் விவேக் நடிப்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை.
தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
Tags:
Cinema
,
singam3
,
Surya
,
சந்தானத்துக்கு இடமில்லை
,
சினிமா
,
ஹரி படத்தில் விவேக்