ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான S3 படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த முதல் ஷெட்யூலில் சூர்யாவுடன் ஸ்ருதி ஹாசன், சூரி, சாம்ஸ், பாடகர் கிரிஷ் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள்.
சிங்கம் 3 படத்தில் நடிகை அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்கவுள்ளார். போலிஸ் அதிகாரியாக வரும் சூர்யாவுக்கு கிராமத்தில் இருக்கும் குடும்ப பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அனுஷ்கா கிராமத்து திருமணமானவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை கிராமத்து திருமணமான பெண்களிடம் பழகி வருகிறாராம்.
ஸ்ருதி ஹாசன் அவருடன் பணியாற்றும் சக காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளனர். எனவே அனுஷ்காவை இப்படத்தில் ஹோம்லியாகவும் ஸ்ருதி ஹாசனை பாடல் காட்சிகளில் கிளாமராகவும் நடிக்கவைக்க ஹரி திட்டமிட்டுள்ளார்.
மேலும் விரைவில் இதன் படப்பிடிப்பில் ரோபோ ஷங்கரும் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் முதல் இரு பாகங்களில் நடித்த பலரும் இதிலும் நடிக்கவுள்ளனர். வழக்கமாக ஹரி படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கும். அது S3 படத்திலும் தொடர்கிறது.
Tags:
Anushka
,
Cinema
,
Surya
,
சினிமா
,
போலிஸ் அதிகாரியை திருமணம் செய்யும் அனுஷ்கா