அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்சமயம் எதிரிகளுடன் விஜய் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒன்று விறுவிறுப்பாக படமாகி வருகிறது. இதைதொடர்ந்து விஜய், எமி ஜாக்சன் பங்குபெறும் ஒரு குத்துப்பாடலும் படமாகவுள்ளது.
இத்துடன் தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் தொடங்குகிறது. எனினும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் மே அல்லது ஜூனில் தான் திரைக்கு வருமாம். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.
Tags:
Cinema
,
அட்லி
,
சினிமா
,
தெறி ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
,
விஜய்