தமிழ் படங்களில் நடிக்காமல் விலகி இருந்த பிரியாமணி கடந்த ஒரு வருடமாக தெலுங்கு படங்களிலும் தலைகாட்டவில்லை. கன்னட படங்கள் மட்டுமே அவருக்கு கைகொடுத்திருக்கிறது. இந்தியில் நுழையும் முயற்சியாக ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுடன் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். பலன் இல்லை. இனி கன்னட படங்களே போதும் என முடிவுக்கு வந்த பிரியாமணி, சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் கூறினார்.
பிரியாமணியின் இயக்குனர் கனவுக்கு சுதீப் நம்பிக்கையூட்டி இருப்பதுபோல் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜும் பிரியாமணிக்கு கைகொடுக்க முடிவு செய்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் ‘மன ஊரி ராமாயணம்’ படத்தை இயக்க உள்ளார் பிரகாஷ்ராஜ். இதில் நடிக்க பிரியாமணியிடம் பேசி வருகிறார். தெலுங்கிலிருந்து ஒதுங்கி இருக்கும் பிரியாமணி தனக்கு ரீ என்ட்ரி படமாக இது இருக்கும் என்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்.
Tags:
Cinema
,
ஒதுங்கி நிற்கும் பிரியாமணி கைகொடுக்கும் வில்லன்கள்
,
சினிமா
,
பிரியாமணி