'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதைக்களம் எப்படி இருக்கும் என்று ஜெயம் ரவி சூசகமாக தெரிவித்தார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலில் இப்படம் பெரும் சாதனை படைத்தது. இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராம் சரண் நடிக்க 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக் தயாராக இருக்கிறது. இந்தி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா, எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி, "’தனிஒருவன்’ 2வது பாகத்துக்கான கதைக் கருவை அண்ணன் தயார் செய்து விட்டார். என்னிடம் கூறிய போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. நம்ம இந்தப் படத்தை பண்றோம் என்றார்.
எப்போது வேண்டுமோ என்னை கூப்பிடு நான் வந்துவிடுகிறேன். கதை விவாதத்தின் போது கூட கூப்பிட்டு என்று தெரிவித்திருக்கிறேன். ஏனென்றால் எங்க அண்ணன் படத்தில் ஓர் உதவி இயக்குநராகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
அந்தப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் சொல்லாத ஒரு விஷயம். நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு விஷயம். தேவைப்படுற ஒரு விஷயமா அது வரும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Tags:
'தனி ஒருவன்' 2-ம் பாகம்
,
Cinema
,
சினிமா
,
ஜெயம் ரவி