விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக திரிஷா, நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஒரு கட்டத்தில் போட்டியாளர்களாக இருந்தனர். பின்னர் நாளடைவில் இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். தற்போது இவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
திரிஷா-நயன்தாரா இருவரும் தோழிகள் என்பதால் இதில் நடிக்க உடனே ஓகே சொல்வார்கள் என்று தெரிகிறது. இந்த புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.
Tags:
Cinema
,
சினிமா
,
மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா