சிம்பு பாடிய பீப் பாடலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் இந்தப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் கனடாவிலிருந்து அந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அனிருத் சொல்லியிருக்கிறார்.
இதனால் உண்மை வெளிவராமல் குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் இந்தவாரம் வெளியாகவிருக்கும் தங்கமகன் படத்துக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் அனிருத் இசையமைப்பில் வெளிவரவிருக்கும் தங்கமகன் படத்துக்கு தமிழகஅரசு தடைவிதிக்கவேண்டும்,
அப்போதுதான் அரசாங்கத்தின் மீது நல்ல அபிப்ராயமும் நம்பகத்தன்மையும் ஏற்படும், தடை விதிக்காமல் அப்படம் திரையிடப்படுமானால் அப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடுஆதிதிராவிடர்முன்னேற்றகழகம் என்கிற அமைப்பினர் கூறியுள்ளனர்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
தங்கமகன்
,
பீப் பாடலால் தங்கமகனுக்கு தடை