டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துவரும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வக்குமார் ஒரு தீவிர அஜித் ரசிகர். எனவே இப்படத்தை மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளில் திரைக்கு கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார்.
அதேசமயம் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரூஸ்லீ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் ரசிகரின் படம்
,
சினிமா
,
விஜய்