‘இளையதளபதி’ விஜய் நடித்த தமிழ் படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். அந்தவகையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட இவரது வேட்டைக்காரன் மற்றும் சச்சின் படங்களை யூ டியூப் தளத்தில் இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
ஒரு தமிழ் நடிகர் நடித்த இரண்டு ஹிந்தி டப் படங்கள் யூ டியூபில் இத்தகைய சாதனையை புரிவது இதுவே முதல்முறையாகும். இதை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ‘இளையதளபதி’ விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி படத்தில் நடித்து வருகிறார்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய் படைத்த புதிய சாதனை