இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ’கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து மலேசியா, பாங்காக், கோவா போன்ற பகுதிகளில் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவ் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் முன்பே அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஷங்கரின் 2.o படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் பிஸியாக உள்ளார். மேலும் கபாலி படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க இன்னும் 45 நாட்கள் உள்ளது.
எனவே கபாலி படம் ரிலீஸ் இரண்டு வாரம் தள்ளிபோகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படியானால் கபாலி படம் மே 1 உழைப்பாளர்கள் தினம் மற்றும் ‘தல’ அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித் உடன் இணையும் சூப்பர் ஸ்டார்
,
சினிமா
,
ரஜினி