ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நொக்கியா போன்கள் தற்போது மார்கெட்டில் இருக்கிறதா இல்லையா என்று மக்கள் சந்தேகிக்கும் அளவு பின்னடைவை சந்தித்துள்ளது. ஆப்பிள் ஐ-போன்களே அனைவரது கைகளிலும் தவண்டு விளையாடுகிறது. ஆனால் நொக்கியா நிறுவனம் மிகவும் அமைதியாக உள்ளது. அது ஏன் என்று யாராவது நினைத்துப் பார்த்தது உண்டா? ஆம் தற்போது சரிவில் உள்ள நொக்கியாவின் ஷியார்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அடுத்த ஆண்டில் நொக்கியா வெளியிட உள்ள "ஏயோன்" என்னும் மோபைல் போனை தான் இனி அனைவரும் வாங்கிப் பாவிக்க உள்ளார்கள். இதனால் ஆப்பிள் ஐ போனின் மார்கெட் வெகுவாகச் சரியும் என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறிவிட்டார்கள். எண்ணில் அடங்காத வசதிகளோடு இந்த நொக்கியாவின் போன் வெளியாக உள்ளது.
சூரிய ஒளியில் இருந்து தனது பற்றரியை சார்ஜ் செய்வது. மற்றும் வயர் மாட்டாமலே (வயர் லெஸ் சார்ஜ்) செய்வது என்று ஏகப்பட்ட மேட்டர் இந்த போனில் உள்ளது. ஆன்ரோய்ட், ஐ.ஓ.எஸ். என்ற இயங்கு தளங்களை புறந்தள்ளி "புரோட்டோ டைப்" என்ற போன்களை நொக்கியா அறிமுகம் செய்ய உள்ளது. இதுவும் அந்த வகையான போன்களே. 15 நாள் வரை சார்ஜ் செய்யாமல் தாக்கு பிடிக்கும். அதிவேக புரோசசர் என்று இவர்கள் ஆராட்சி கூடத்தில் இருந்து பட்டையை கிளப்புகிறார்கள். சிலர் சொல்கிறார்கள், குறித்த இந்த மாடல் வெளியே வரும்போது ஆப்பிள் போன் காணமல் போய் விடும் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கே தெரியும் என்று. அதனால் அடிக்கடி மாடல்களை மாற்றி , புதுசு புதுசாக விற்று பணத்தை சம்பாதிக்க நினைக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
Tags:
"ஏயோன்" போன் வெளிவந்தால் ஆப்பிள் ஐ-போன் அழியும் நிலை
,
Technology