பீப் பாடல் விவகாரத்தால் சிம்பு மற்றும் அனிருத் இருவரின் எதிர்காலமும் தமிழ் சினிமாவில் முடங்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்திட காவல் துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பு நடித்து வந்த படங்கள் தற்போது பாதியில் நிற்கின்றன. மேலும் அனிருத்தை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்தவர்களும் தர்போர்த்து நீக்கம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக குறுகிய காலத்திலேயே கொலைவெறி பாடலின் மூலம் மாறினார் அனிருத்.
ஆனால் சமீபத்தில் வெளியான பீப் பாடல் அனிருத்துக்கு நீங்காத அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. பீப் பாடலால் தற்போது அனிருத்தின் எதிர்காலம் தமிழ் சினிமாவில் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது.
இந்தப் பாடலால் நாளுக்குநாள் இவருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இவர் இசையமைக்க இருந்த படங்கள் வேறு இசையமைப்பாளர்களின் கரங்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறது.
அனிருத்தை தொடர்ந்து வளர்த்து விட்ட தனுஷ் தனது அடுத்தடுத்த 3 படங்களுக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது கொடி படக்குழுவினர் தங்களது படத்தில் இருந்து அனிருத்தை நீக்குவதா? வேண்டாமா? என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ் தவிர்த்து தெலுங்க்கு படங்களிலும் அனிருத்தை ஒப்பந்தம் செய்ய நடந்த பேச்சு வார்த்தைகள் தற்போது பாதியிலேயே நிற்கின்றன.இதனால் வேகமாக முன்னேறி வந்த அனிருத்தின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதற்கிடையில் இயக்குநர் அமீர் தனது அடுத்த படத்தில் சிம்புவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த விவகாரத்தால் அமீர் தனது முடிவை மாற்றிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிம்பு மற்றும் அனிருத் இருவரின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இந்த பாடலால் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது என்பதே கசப்பான உண்மை.
Tags:
Cinema
,
அனிருத் திரையுலக வாழ்க்கை
,
சினிமா
,
முடிவுக்கு வருகிறதா சிம்பு