வேதாளம் படம் ரீலீசாகி 5 வாரங்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இப்படம் ரிலீசானதிலிருந்தே படத்தின் வசூல் எவ்வளவு என்று சரியாக கூற முடியாத நிலையில் பல இணையங்கள் அநியாயத்துக்கு வசூல் தொகையை ஏற்றிவிட்டன. படத்தின் தயாரிப்பாளரே எனக்கு வசூல் எவ்ளோன்னு தெரியல என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வேதாளம் படம் ரிலீசாகி 5 வாரங்களை கடந்துவிட்டதால் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த வசூல் தெரியாத நிலையில் தமிழ்நாடு விநியோகஸ்தர்களின் பங்கு மட்டும் 5 வாரங்களில் 47 கோடியை தொட்டிருக்கிறதாம். இதனால் விஜய்யின் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்த சாதனையை அஜித் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தில் ரஜினியின் எந்திரன் படம் இருக்கிறது. இப்படம் முதல் 5 வாரங்களில் 64 கோடியை விநியோகஸ்தர் பங்காக வசூலித்தது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினிக்குப் பிறகு அஜித் புரிந்த சாதனை