விஜய்யின் நடிப்பில் உருவாகவுள்ள 60வது படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. இயக்குனர் பரதன், தயாரிப்பாளர் விஜயா புரொடக்ஷன் நிறுவனம், எடிட்டர் ப்ரவீண், ஒளிப்பதிவு மதி மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என அனைத்தும் முடிவாகிவிட்டது.
தளபதியுடன் டூயட் பாடப்போவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் வந்தாச்சு. ஸ்வீட் கடை நடிகையை வளைத்திருக்கிறார்கள்.
இதற்குமுன்பே விஜய்யுடன் ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஜில்லா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால். இந்த இருபடங்களும் நல்ல மகசூல். ஆக,
இப்படத்தின் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
இதனால் நான்தான் தளபதிக்கு ராசியான ஜோடியாக்கும் என தோழி நடிகைகளிடம் பீத்தியிருக்கிறார். கடுப்பில் இருக்கிறார்களாம் சகநடிகைகள்.
Tags:
Cinema
,
காஜல் அகர்வால்
,
சினிமா
,
விஜய்
,
விஜய்க்கு நான் தான் ராசியானவள்