மழை பெய்தால் பள்ளி குழந்தைகளுக்கு கொண்டாட்டம், மழை பெய்யாவிட்டால் தியேட்டர்காரங்களுக்கு கொண்டாட்டம், ஆனால் மழையோ, வெயிலோ தனக்கு பிடித்த நடிகனின் படம் வந்தால் தியேட்டர் விசிட் கன்ஃபார்ம். இப்படி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது வேதாளம் படம்தான்.
படம் ரிலீசான நாளிலிருந்தே மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் இருந்த விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் முடிந்திருக்கிறது ரெயின்…
வேதாளம் படம் இன்றுடன் 11 நாட்கள் ஆகிறது. ஆளாளுக்கு 10 நாட்களுக்கு 100 கோடி என்று சொல்லி ஆங்காங்கே போஸ்டர்கள் அடிக்காத குறையாக இணையதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ படம் நல்லா ஓடுதாம் ஆனால் காசுதான் கைக்கு வரல என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
மழையை காரணமாக வைத்து பல இடங்களில் வசூல் நிலவரத்தை இன்னும் என்கிட்ட சொல்லமாட்றாங்க என்கிறாராம்.
சீக்கிரம் 100 கோடின்னு சொல்லுங்க ரத்னம் சார், இல்லைன்னா அடுத்த வாரம் 1000 கோடின்னு ஒரு புரளியை கிளப்பிவிட்ருவாங்க…
Tags:
Cinema
,
சினிமா
,
வேதாளம்
,
வேதாளம் படம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்