முன்பெல்லாம் ஒரு நடிகை பல வருடங்கள் நின்று ஜொலிப்பார். இப்போது ஒரு வாரம் ஜொலித்தாலே அதிசயம். நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை சமந்தாவும், ஏமி ஜாக்சனும் தான் ஸ்டார் பிளேயர்கள்.
தனுஷின் தங்கமகன் படத்தில் இவ்விரு நடிகைகளும் இணைந்து நடித்தனர். அவர்களை அப்படியே விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் அட்லி. இது தவிர தனித்தனி புராஜெக்ட்களும் இரண்டு நடிகைகளுக்கும் இருக்கின்றன.
சமந்தா நடித்துள்ள 24 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விஜய்யுடன் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட்லுக்கும், அப்படத்தின் பெயரும் வெளியாகிறது. நவம்பர் நேற்று தங்கமகன் படத்தின் இசை வெளியிடப்படுகிறது.
இந்த மூன்றில் இரண்டு படங்களில் ஏமி ஜாக்சனும் நடித்துள்ளார். அத்துடன், தங்கமகனின் இசை வெளியாகிற அதேநாள் – நவம்பர் 27 – ஏமி ஜாக்சன், உதயநிதி நடித்துள்ள கெத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறது.
என்ன தான் நயன்தார படங்கள் தொடர் வெற்றி என்றாலும் கை வசம் இந்த வருட முக்கிய நட்சத்திரங்க என்றால் அது சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இவர்களிடம் தான் கைவசம்
Tags:
Cinema
,
இந்த வருட டாப் ஹீரோயின்கள்
,
எமி ஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா