சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. மேலும் அஜித் இதுவரை நடித்த படங்களிலேய அதிக வசூல் செய்த படமாக வேதாளம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இன்று வெளிவந்த சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இதுவரை வெளிவந்த படக்களில் அதிக வசூலை பெற்று குவித்த படம் வேதாளம்.
சென்னையில் 2-வது வார பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கமலின் தூங்காவனம் படத்தையும், ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் படத்தையும், வசூலில் முந்தி உள்ளது அஜித்தின் வேதாளம்.
வேதாளம் படம் 2-வது வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 237 காட்சிகள் ஓடி 1.03 கோடி வசூல் செய்து வசூலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் வார இறுதியில் 3.23 கோடி வசூல் செய்து இருந்தது. சென்னையில் மொத்தம் 13 நாட்களில் 5.15 கோடி வசூல் செய்து உள்ளது வேதாளம்.
சமீபத்தில் வெளியான ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது. அது 150 காட்சிகள் ஓடி 39.23 லட்சம் வசூல் செய்து உள்ளது.
கமலின் தூங்காவனம் 3-வது இடத்தில் உள்ளது மொத்தம் 147 காட்சிகள் ஓடி 32.52 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வார இறுதியில் மொத்தம் 1.69 கோடி செய்து உள்ளது.
சல்மான் கானின் “பிரேம் ரதன் தா பயோ” 4-வது இடத்தில் உள்ளது 54 காட்சிகள் ஓடி 14.73 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வாரத்தில் 42.93 லட்சம் வசூலித்து உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் வரை இப்படம் 79.98 லடசம் வசூல் செய்து உள்ளது.
புதிய படமான ஒரு நாள் இரவில் 5-வது இடத்தில் உள்ளது. இப்படம் 69 காட்சிகள் ஓடி 9.62 லட்சம் வசூல் செய்து உள்ளது.
இரண்டாவது வார முடிவில் அஜித்தின் வேதாளம் மொத்தம் 117 கோடி அளவிற்கு வசூல் செய்து சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
உலக அளவில் முதல் இடத்தை பிடித்த அஜித்
,
சினிமா
,
வேதாளம்