அஜித் நடித்துள்ள வேதாளம் படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் வேதாளம் வெளியாகவுள்ள திரையரங்குகளை இப்போதே அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டனர்,
ரசிகர்கள். பேனர், கட்அவுட் முதல் தோரணங்களுடன் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பையும் நவம்பர் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் நாகர்ஜுன மகன் நடிப்பில் உருவான 'அகில்' திரைப்படம் மிக பிரம்மாண்டமாக ஆந்திரா முழுவதும் வெளியாகவுள்ளது.
அது மட்டும்மில்லாமல் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள 'பிரேம் ராடன் தன் பயோ' படமும் ஆந்திராவில் உள்ள முக்கிய திரையரங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
இதனால் வேதாளம் தெலுங்கு பதிப்பு (ஆவேஷம்) படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் இப்படம் தள்ளிப்போகலாம் என கூறுகின்றனர். அதே போல் தூங்காவனம் படமும் அங்கு 10 ம் தேதி வெளியாக இருந்து தற்போது 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
அஜித்
,
கடைசி நேரத்தில் மாறிய வேதாளம் ரிலீஸ் தேதி
,
சினிமா
,
வேதாளம்