கமல் தயாரித்து நடித்துள்ள தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவிருப்பதாக கமல் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். (அய்யோ.. பாவம்!)
அந்த நம்பிக்கையில்தான் முதல்நாளே தூங்காவனம் படத்தை பார்க்க வேண்டும் என் ஆவலில் அநியாயத்துக்கு அதிக பணத்தைக் கொடுத்து டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்திருக்கிறார்கள்..
ரசிகர்களைவிடுங்கள்… கமலே கூட தன்னுடைய படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்ற நம்பிக்கையில்தான் கடைசிகட்ட வேலையில் பிஸியாக இருக்கிறார்.
திடீர் திருப்பமாக….
செம்ம ட்விஸ்ட்டாக…
தீபாவளிக்கு தூங்காவனம் படம் ரிலீஸ் ஆகாமல் போனால் எப்படி இருக்கும்?
இது யூகமோ…
கற்பனையோ அல்ல…!
திரைமறைவில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால்…
விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்ட கதி தூங்காவனம் படத்துக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.
தூங்காவனம் படம் ரிலீஸ் ஆகும் அதேநாளில் அஜித் நடித்துள்ள வேதாளம் படமும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பது ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்.
யெஸ்…கடந்த சில நாட்களாக சர்ச்சையில் அடிபட்டுக் கொண்டிருக்கும் அதே 1000 கோடி நிறுவனம்தான்.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வேதாளம் படத்தை வாங்கிய பிறகு தியேட்டர்காரர்களுக்கு தூக்கம் போய்விட்டதாக படத்துறையில் பேச்சு அடிபடுகிறது.
‘தூங்காவனம்’ படத்துக்கு தியேட்டர் தருவதாக பல வாரங்களுக்கு முன்பே அக்ரிமெண்ட் போட்டநிலையில் அந்த தியேட்டர்களுக்கு எல்லாம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து போன் அழைப்பு வருகிறதாம்..!
‘தூங்காவனம்’ படத்தின் அக்ரிமெண்ட்டை கேன்சல் செய்துவிட்டு, வேதாளம் படத்துக்கு தியேட்டர் தர வேண்டும் என்று அதிகாரதொனியில் மிரட்டுகிறதாம் அந்தத் தொலைபேசி குரல்.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் ‘பின்னணி’ தெரிந்த தியேட்டர் அதிபர்கள் மறுபேச்சு பேசாமல் ‘தூங்காவனம்’ படத்துக்கு போட்ட அக்ரிமெண்ட்டை தூக்கிப்போட்டுவிட்டு வேதாளம் படத்துக்கு தியேட்டரை கொடுக்க சம்மதிக்கிறார்களாம்.
சென்னையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ‘தூங்காவனம்’ படத்தை 4 காட்சிகள் திரையிட 2 மாதங்களுக்கு முன்பே அக்ரிமெண்ட் போட்டிருந்தார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன்.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் ‘அன்புக்கட்டளை’க்குப் பிறகு ஏவிஎம் ராஜேஸ்வரியில் ‘தூங்காவனம்’ படத்துக்கு 2 காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2 காட்சிகள் வேதாளம் படத்துக்காக பிடுங்கப்பட்டுவிட்டது.
ஏவிஎம் ராஜேஸ்வரி என்பது உதாரணம்தான். இதுபோல் பல தியேட்டர்களில் ‘தூங்காவனம்’ படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுவிட்டன.
இதனால் ‘தூங்காவனம்’ படத்திற்கான தியேட்டர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
தற்போதைய தகவலின்படி… தமிழகம் முழுக்க 200 தியேட்டர்களில்தான் ‘தூங்காவனம்’ ரிலீஸ் ஆகிறது.
அதுவும் பல தியேட்டர்களில் பகல் காட்சி அல்லது இரண்டு காட்சிகள் மட்டும்தான்.
இப்படியாக, தூங்காவனம் படத்துக்காக அக்ரிமெண்ட் போடப்பட்ட பல தியேட்டர்கள் வேதாளம் படத்துக்காக பிடுங்கப்பட்டதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் அப்படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கிய எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன்.
மற்ற ஏரியாக்களை எல்லாம் விற்றுவிட்ட மதன் 2 கோடி மதிப்புள்ள சென்னை ஏரியாவில் தானே சொந்தமாக வெளியிடுகிறார். சென்னையில் புக் பண்ணி வைத்திருந்த பல தியேட்டர்கள் கையைவிட்டுப்போய்விட்டதால் 2 கோடியை திரும்ப எடுக்க முடியுமா என்ற கவலையில் இருக்கிறார்.
300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வேதாளம் படம் இன்றைய நிலவரப்படி சுமார் 600 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
ரிலீஸுக்கு இன்னும் சில தினங்கள் இருக்கின்றன.
இந்த இடைப்பட்டநாட்களில் ஒருவேளை மேலும் பல தியேட்டர்கள் பிடுங்கப்பட்டால், கடைசியில் ‘தூங்காவனம்’ படம் 50 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலைக்குத்தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.
இது மன்சூரலிகானின் அதிரடி படம் வெளியான தியேட்டர்களின் எண்ணிக்கையைவிட குறைவு.
அப்படி ஒரு சூழல் உருவானால் தூங்காவனம் படம் தீபாவளிக்கு வெளிவராது என்பதே இப்போதைய நிலவரமாம்.
அதனால்தான் தீபாவளி அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர்களுக்கான காட்சி கூட ரத்து செய்யப்பட்டு, தீபாவளிக்கு அடுத்தநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக சொன்ன கமலுக்கு இந்த நேரத்தில்தான் சகிப்புத்தன்மை கூடுதலாக தேவை.
அதை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது..!
Tags:
Cinema
,
சினிமா
,
தூங்காவனம்
,
வேதாளம்
,
வேதாளம்'