பிரபல தமிழ் நடிகையான 'பசி' சத்யா திடீர் மாரடைப்பு காரணமாக, சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 1979ம் ஆண்டு வெளியான பசி படம் மூலம் பிரபலமானவர் நடிகை சத்யா (62).
இதனால் அவரை 'பசி' சத்யா என அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.
இவர் வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள் உள்பட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த சத்யாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 'பசி' சத்யாவுக்கு கிருஷ்ணன் என்ற கணவரும் விஜய சங்கர், சரவணன் என்ற மகன்களும் உள்ளனர்.
Tags:
சினிமா
,
ஹார்ட் அட்டாக்... ‘பசி’ சத்யா மருத்துவமனையில்