ரஜினிகாந்தின் ‘எந்திரன்-2’ பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்களை சந்திக்க ரஜினியும் டைரக்டர் ஷங்கரும் அமெரிக்கா சென்றுள்ளனர். இதன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார்.
இரண்டாம் பாகத்தில் வேறு நடிகையை தேர்வு செய்கின்றனர். இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியுடன் நடிக்க நடிகைகள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் ஜோடியாக ‘சந்திரமுகி’யில் நயன்தாராவும் ‘சிவாஜி’ படத்தில் ஸ்ரேயாவும் ‘கோச்சடையானில்’ தீபிகா படுகோனேயும் ‘லிங்கா’ படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே நடித்துக்கொண்டு இருக்கிறார். ‘எந்திரன்-2’ படத்தில் நடிக்க அவருடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்த பல நடிகைகள் முயற்சிக்கின்றனர். தூதும் அனுப்புகிறார்கள். ஒரு கதாநாயகி வேடத்துக்கு எமிஜாக்சனை ஷங்கர் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. இன்னொரு கதாநாயகி தேர்வு நடக்கிறது, இந்த நிலையில் திரிஷாவும் ரஜினியுடன் ஜோடி சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நான் ஜோடியாக நடித்து விட்டேன். ஆனால் ரஜினிகாந்துடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.’ என்றார். எந்திரன்-2 படத்தில் நடிக்க திரிஷா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம்ரவி போன்றோருடன் திரிஷா ஏற்கனவே நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
கபாலி
,
சினிமா
,
திரிஷா ரஜினியுடன் ஜோடி சேர விருப்பம்
,
ரஜினி