தமிழகத்தில் கமலுக்குப் பிறகு ஒரு ஹீரோவுக்கு கேரள ரசிகர்களும், மலையாள மாஸ் ரிலீஸும் உண்டெனில் அது விஜய்க்குத்தான் எனலாம். எனினும் விஜய்யின் 59வது படம் ‘தெறி’ தலைப்பிலேயே மலையாள சினிமா மக்களை கொஞ்சம் வருத்தமடையச் செய்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் படம் ’தெறி’இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று முன் தினம் மாலை வெளியாகி ஹிட்டானது. விஜய்யின் ரசிகர்கள் தெறி என இந்திய அளவில் ட்ரெண்ட் உருவாக்கி கொண்டாடினர்.
’தெறி' என்பது மலையாளத்தில் கெட்டவார்த்தை எனப் பொருள் படுமாம். விஜய்க்கென தனி ரசிகர்கள் கேரளாவில் உள்ள நிலையில் ‘தெறி’ தலைப்பு அவர்களை கொஞ்சம் சங்கடமாக்கியுள்ளது என்றே கூறவேண்டும். கெட்டவார்த்தை என ஒரு படத்துக்குப் பெயரா என்ற ரீதியில் தற்போது அங்கே சலசலப்பும் உருவாகியுள்ளது.
Tags:
'தெறி’ கெட்டவார்த்தையா???? சினிமா
,
Cinema
,
எமி ஜாக்சன்
,
சமந்தா
,
விஜய்