தற்போது கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் ஐட்டம் பாடல்களுக்கு ஆட எந்த முன்னணி நடிகைகளும் மறுப்பதில்லை. அதேபோல் முன்னணி ஹீரோயினிகளே சமீபகாலமாக குத்துப்பாட்டுக்கும் ஆடத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலில் குத்தாட்டமாடிய அஞ்சலி, தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் சரைனொடு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் வலம் வரும் அஞ்சலி (வீடியோ)
அதையடுத்து, அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படங்களை சேர்ந்த சிலர், ஹீரோயினாக நடிக்கும்போது அயிட்டம் பாடலுக்கு நடனமாடினால் இந்த படங்களின் வியாபாரம் பாதிக்குமே என்று கேட்கும் போது
அதற்கு, “ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட எத்தனையோ நடிகைகள் ஒரு பாட்டுக்கு நடனமாடிதானே வருகிறார்கள். இப்போது இதெல்லாம் ஒரு பேஷனாகி விட்டது. இதனால் நான் நடிக்கிற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது” என்கிறாராம் அஞ்சலி.
Tags:
Cinema
,
அஞ்சலி
,
ஐட்டம் பாடலிற்கு ஆட ஆசைப்படும் அஞ்சலி
,
சினிமா