தமிழ் சினிமாவை பொறுத்த வரை எப்போதும் ஹீரோக்களுக்காக மட்டும் தான் படம் பார்ப்பவர்கள் அதிகம். அந்த வகையில் அவர்களையும் தாண்டி திரையில் சோலோ ஹீரோயினாக வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. இதில் சிலர் இந்த முயற்சியில் தோல்வியும் அடைந்துள்ளார். சோலோ ஹீரோயினாக கலக்கிய, சொதப்பிய கதாநாயகிகள் தொகுப்பு தான் இந்த பகுதி
அனுஷ்கா
சோலோ ஹீரோயினாக மாபெரும் வெற்றி பெற்று, பல ஹீரோயின்களுக்கு ரோல் மாடல் ஆனவர் அனுஷ்கா தான். இவரின் அருந்ததி தென்னிந்தியா முழுவதும் பிரமாண்ட வெற்றி பெற, இதை தொடர்ந்து பஞ்சமுகி, ருத்ரமாதேவி என கலக்கினார். நேற்று ரிலிஸான இஞ்சி இடுப்பழகி படம் கூட அனுஷ்காவிற்கு தான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இந்த வருடம் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். அந்த வரிசையில் இவர் நடித்த மாயா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய சோலோ ஹீரோயினாக தன் வெற்றியை பதிவு செய்து விட்டார்.
த்ரிஷா
த்ரிஷாவிற்கு சோலோ ஹீரோயின் ராசியே இல்லை. கௌதம் மேனன் இயக்கத்தில் சென்னையில் ஒரு மழைக்காலம் என ஒரு படம் ஆரம்பித்து பின் ட்ராப் ஆனது. ஆனால், தானும் வெற்றி பெற வேண்டும் என நாயகி படத்தின் மூலம் சோலோ ஹீரோயினாக களம் இறங்கியுள்ளார். இப்படம் வந்தால் தான் ரிசல்ட் தெரியும்.
ஜோதிகா
ஜோதிகா நடிப்பதை விட்டு பல காலம் ஆகிய நிலையில் ரசிகர்களுக்கு வேண்டுக்கோளுக்கு இணங்க 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு முன் இவர் சோலோ ஹீரோயினாக நடித்த ஜுன் 6 படம் தோல்வியடைந்தது
குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி 80களில் சுஹாசினி, ரேவதி, ஸ்ரீப்ரியா போன்ற பல நடிகைகள் சோலோ ஹீரோயினாக கலக்கினார்கள். ஆனால், அதன் பிறகு ரம்பா, சிம்ரன், சினேகா போன்ற சில ஹீரோயின்கள் தோல்வியும் அடைந்தனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
சொதப்பிய கதாநாயகிகள்
,
ஹீரோயினாக கலக்கிய