தமிழ்திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமாக இருப்பவர் நடிகர் கார்த்திக்.
நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலகுறைவு காரணமாக கார்த்திக் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்தி பரவியது. ‘வாட்ஸ்அப்’–ல் கார்த்திக் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அவர் வைத்தியசாலைக்கு சென்றது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது:–
கார்த்திக் ஏற்கனவே ஒரு சிறிய ஆபரேஷன் செய்து இருந்தார். அது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றார். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். கவலைப்படும்படி எதுவும் இல்லை. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Cinema
,
கார்த்திக்
,
கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி
,
சினிமா