அனேகன் படத்தில் இடம் பெற்ற ‘டங்கா மாரி’… என்ற கவித்துவமான பாடலை எழுதிய ரோகேஷ் தற்போது வேதாளம் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ என்ற மற்றொரு கவித்துமான பாடலை எழுதியிருக்கிறார். அதில் உள்ள வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது எழுதிய அவருக்கே கூடத் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. சென்னையிலேயே பிறந்து வளர்ந்த சென்னைவாசிகளுக்குக் கூட பல வார்த்தைகள் தெரியுமா என்பது சந்தேகம்தான்.
டியூனுக்காகப் போகிற போக்கில் எழுதப்பட்ட பாடலாகத்தான் அது தெரிகிறது. ஆனால், அர்த்தம் புரிகிறதோ இல்லையோ இந்தப் பாடல் ஹிட்டாகிவிட்டது. ‘டங்கா மாரி’ என்று கொஞ்ச நாட்கள் பாடித் திரிந்த குட்டீஸ்கள் கூட இப்போது ஆளுமா டோலுமா என்றுதான் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் கூட இந்தப் பாடலின் வரிகளைப் பற்றித்தான் பேச்சு அதிகமாக உள்ளது. இந்தப் பாடலின் அர்த்தத்தை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு வழங்கப்படும் என்று படக் குழுவினர் அறிவித்தால் கூட அவ்வளவு சீக்கிரம் யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது.
Tags:
Cinema
,
அனேகன்
,
ஆளுமா டோலுமா’ பாடலின் அர்த்தம் என்ன?
,
சினிமா
,
வேதாளம்